அன்புள்ள உறுப்பினர்களே,
19.11.2015 அன்று மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற IRCTC நிறுவனத்தினால் நமது சங்க உறுப்பினர்களுக்காக நடைபெற்ற IRCTC TOURISM AWARNESS PROGRAM நிகழ்ச்சியின் தொகுப்பு
1.பதிவு செய்த உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கே தங்களது வருகையே பதிவு செய்தனர்.
2.அதிகாரிகள் வருவதற்கு முன் உறுப்பினர்களிடம் கருத்து கேட்டப்பட்டது
3. சரியாக 11 மணிக்கு IRCTC நிறுவனத்தின் மதுரை AREA MANAGER அவர்கள் மற்றும் சென்னை IRCTC, Sr.Executive/IT அவர்கள் மற்றும் IRCTC நிறுவனத்தின் மதுரை OFFICE STAFF வருகை தந்தனர்
4.அனைவரையும் நமது சங்கத்தின் மாநில செயலாளர் அவர்கள் வரவேற்றரர்
5.நமது சங்கத்தின் மாநில மக்கள் தொடர்பு அலுவலர் ,அவர்கள் IRCTC நிறுவன அதிகாரிகளிடம் நமது இ டிக்கெட் முகவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டு அதற்குரிய விளக்கங்களையும் பெற்று கொடுத்தார்
6.IRCTC, Sr.Executive/IT அவர்கள் நமது சங்க உறுப்பினர்களுக்கு நல்லதொரு ஆலோசனைகளை வழங்கினார்
7.IRCTC நிறுவனத்தின் மதுரை AREA MANAGER அவர்கள் நமது சங்க உறுப்பினர்களுக்கு ரயில் சுற்றுல்லா பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அதே நேரத்தில் ரயில் டூர் PACKAGE பற்றி விவரித்தார். தென் மாவட்டத்திலிருந்து காசி ,ஷீரடி ,திருப்பதி ,அஜ்மீர்,கோவா மற்றும் பிற சுற்றுல்லா மற்றும் புனித தலத்திற்கும் நமது உறுப்பினர்களின் கோரிக்கைகளின்படி ரயிலை இயக்குவதாக அறிவித்துள்ளார்
8.மேற்படி அவர் கூறுகையில் இதுவே அதுவும் இந்தியாவிலே IRCTC யின் முதல் கூட்டம் என்றும் நமது TETAWA வை பெருமை பட அறிவித்தார்
9. சிறப்பு விருந்தினர்களை நமது சங்க மாநில தலைவர்,செயலாளர்,பொருளாளர்,மக்கள் தொடர்பு அலுவலர்,மதுரை மாவட்ட செயலாளர் மண்டலம்-1 போன்றோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்
10. சங்க சான்றிதழ் மற்றும் ஏஜெண்டு லாகின் மூலம் விநியோகம் செய்த டிக்கெட் நகலை நேற்று (18-11-2015) காலை 10 மணிக்குள் சமர்பித்து இருந்த 20 உறுப்பினர்களுக்கு IRCTC சான்றிதழ் வழங்கப்பட்டது.
11. நமது சங்கத்தின் சான்றிதழ் 31-03-2016 வரை இருக்கின்ற அணைத்து உறுப்பினர்களுக்கும் சங்க அனுமதியுடன் IRCTC யின் டூரிசம் லாகின் ID தருவதாக அறிவிக்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளவும்.தயவு செய்து யாரும் IRCTC அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொள்ளவேண்டம்.
12.அனைவருக்கும் IRCTC சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது
குறிப்பு : வழக்கம் போல் நமது உறுப்பினர்கள் எல்லாம் முடிந்தவுடன் சங்கத்தை தொடர்புகொண்டு நாங்கள் மெயில் பார்கவில்லை என்றும் சிலபேர் மெயில் வரவில்லை என்றும் கூறினர் .உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள் தங்களுக்கு அனுப்புகிற மெயில் அனைத்தும் தனித்தனியாக அனுப்புவதில்லை ஒரே நேரத்தில் நமது சங்கத்தின் SOFTWARE மூலம் அனுப்பபடுகிறது.இதற்க்கு ஒரே வழி தாங்கள் அனைவரும் தங்களது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் நமது சங்க வெப்சைட் ஐ DESKTOP பில் வைக்கவும்.
மேலும் புகை படத்தை பார்க்க இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்
Public Relation Officer
Tamil Nadu E-Ticket Agents Welfare Association
Please Visit http://www.tetawa.org
Our Strength -Total E-ticket Agents All Over India - 1,50,000 Members