மதுரை,25-05-2015 திங்கள் அன்று காலை 10 க்கு மணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய /மாநில அரசுகளை ஈர்க்கும் வகையில் இ டிக்கெட் முகவர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது .அந்த போராட்டத்தின் அன்றைய கோரிக்கையும் இன்றைய வெற்றியும்
நமது கோரிக்கைகள்
1.இ-கவர்னன்ஸ் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை இ-டிக்கெட் முகவர்களுக்கு எவ்வித நிபந்தனை இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும்
STATUS : பேச்சு வார்த்தை நடை பெற்று கொண்டுஇருக்கிறது
2.இ-டிக்கெட் முகவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் மருத்துவ காப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்
STATUS : பேச்சு வார்த்தை நடை பெற்று கொண்டுஇருக்கிறது
3.பொது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் ஆன் லைன் மின் கட்டணம் செலுத்துவதற்கு சேவைக் கட்டணதுடன் இலவச லாகின் ஐடி களை உடனே வழங்க வேண்டும்
STATUS : பேச்சு வார்த்தை நடை பெற்று கொண்டுஇருக்கிறது
4.அரசு பேருந்துகளில் பயணசீட்டை முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக சேவைக்கட்டணதுடன் இலவச லாகின் ஐடி களை உடனே வழங்க வேண்டும்
STATUS : பேச்சு வார்த்தை நடை பெற்று கொண்டுஇருக்கிறது
5.பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் தோன்றும் போலி ஏஜெண்டுகளை உடனே ஒழிக்க வேண்டும்
STATUS : போலி ஏஜெண்டுகளுக்கு காவல் துறை மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
6.ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைபடுத்தி பயணிகளின் முழு பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
STATUS : உறுதி அளித்துள்ளனர்
7.ரயில் இ டிக்கெட்டுகளை இறுதி நேரத்தில் இரத்து செய்யும் வசதியான TDR முறையில் தற்பொழுது உள்ள 1 மணிநேர கால அவகாசத்தை 48 மணி நேரமாக மாற்ற வேண்டும்
STATUS : பரிசிலனையில் உள்ளது
8.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் தமிழ்நாட்டின் கீழ் இயங்கும் ரயில்வே கோட்டத்தில் இணைக்க வேண்டும்
STATUS : தற்பொழுது வாய்ப்பு இல்லை ஆனால் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
9.கோவை to பெங்களுர், நாகர்கோவில் to நாகூர், இராமேஸ்வரம் to டெல்லி க்கு உடனடியாக நேரடி ரயில் சேவையே தொடங்க வேண்டும்.ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் உள்ள மதுரை to போடி அகல ரயில்பாதை தொடங்குவது பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
STATUS : கோவை to பெங்களுர் ரயில் சேவை தொடங்க அனுமதி
10.ரயில் பயணிகளை பாதிக்கும் வகையில் IRCTC மறைமுகமாக வசூலிக்கும் சேவை கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்
STATUS : விரைவில் எதிர் பார்க்கலாம்
11.ரயில்வே நிர்வாகம் அதிக பயண கட்டணத்தில் இயக்கும் பிரிமியம் ஸ்பெஷல் ரயில்களையும் மற்றும் பிரிமியம தக்கல் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து அவற்றை சாதாரண கட்டணத்தில் பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் இயக்க வேண்டும்
STATUS : பிரிமியம் தட்கல் பயண சீட்டை ரத்து செய்தால் 50% சதவிதம் பணம் திரும்ப கிடைக்கும் http://pib.nic.in/newsite/pmreleases.aspx?mincode=23
12.இ-டிக்கெட் முகவர்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவில் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை விதிக்கப்பட்டுள்ள தடையை ரயில்வே/ IRCTC நிர்வாகங்கள் உடனடியாக நீக்கவேண்டும்
STATUS : அங்கீகாரம் கிடைத்து விட்டது http://pib.nic.in/newsite/pmreleases.aspx?mincode=23
13.மதுரை விமான நிலைத்திலிருந்து மலேசியா,சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்
STATUS : விரைவில் எதிர் பார்க்கலாம்
14.மத்திய/மாநில அரசுக்காக பணத்தை வசூல் செய்து கொடுக்கும் இ-டிக்கெட் முகவர்களின் வங்கி கணக்கில் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் மறைமுகமாக வங்கிகள் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வசூலிக்கும் லெட்ஜர் போலியோ கட்டணத்தை முகவர்களின் கணக்கிலிருந்து எடுப்பதை தடுக்க வேண்டும்
STATUS : குறைத்து கொள்ளுவதாக தெரிவித்துள்ளனர்
15.தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை மேம்படுத்தி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டினர் கவரும் வகையில் செயல்படுத்தி அதனை சுற்றிபார்க்கவும் மற்றும் தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்யவும் ஆன் லைனில் புக்கிங் செய்வதற்கு ஏதுவாக இ-டிக்கெட் முகவர்களுக்கு இலவச லாகின் ஐடி களை வழங்க வேண்டும்.சுற்றுல்லா தலங்களை அழிவிலிருந்து பாதுகாக்க 'சுற்றுல்லா காவல் துறை' அமைக்க வேண்டும்