16-07-2014
20-7-2014 அவசர பொதுகூட்டம் -தமிழக அரசின் E-GOVERNANCE திட்டம் ELCOT நிறுவனத்துடன்
இது ஒரு கடைசி வாய்ப்பு என்பதால் இதுவரை விண்ணப்பம் தராதவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சமர்பிக்கவும்.
 
ஏற்கனவே சமர்ப்பித்தவர்கள் இந்த கூட்டத்தில் கொள்ள கட்டாயமில்லை ​
 
 
Regd.No : 124/2010

அன்புள்ள உறுப்பினர்களே,

    இப்பவும், வருகின்ற 20-07-2014 (ஞாயிற்று கிழமை) மதியம் 2.00மணிக்கு,  மதுரை,ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள,NO.2,நியூ காலேஜ் ஹவுஸ் முதல் தளத்தில் அமைந்துள்ள கூட்டம் அரங்கில் அவசர பொதுக் கூட்டம் நடைபெறுவதால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
அதுசமயம் தமிழக அரசின் ELCOT நிறுவனத்தில் சேருவதற்கான விண்ணப்பபடிவம் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அன்றே பெறப்பட்டு ELCOT நிறுவனத்தில்  சமர்பிக்கப்படும்.
 
வரும்பொழுது 3NOS.பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ மற்றும் கம்பெனி முத்திரை கொண்டு வரவும்
 
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்

​.

கூட்டத்தின் நோக்கம்


அன்புள்ள உறுப்பினர்களே,

​         இப்பவும் நமது சங்கத்தின் மூலமாக தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையின் வாயிலாக, தமிழக அரசு பரிந்துரையின் படி 2-7-2014 (புதன் கிழமை)அன்று காலை 10 மணியளவில் நமது சங்க மாநில செயலாளர் மற்றும் மாநில மக்கள் தொடர்பு அலுவலர்  சென்னையில் தமிழக அரசின் ELCOT நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பேச்சுவார்த்தையின் போது நமது சங்க உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசின் E-GOVERNANCE  திட்டத்தை ELCOT நிறுவனத்துடன் இணைந்து செயல் படுத்துவது எனவும், மின்கட்டணம்,வீட்டு வரி ,குடிநீர் வரி வசூலிக்க தனியாக நமது சங்க உறுப்பினர்களுக்கு LOGIN ID வழங்க வேண்டும் எனவும் ,தமிழக அரசின் இணையதள மூலமாக செயல்படக்கூடிய அனைத்து நல திட்டங்களை பொது மக்களுக்கு விண்ணப்பம் செய்து கொடுக்க அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வெற்றியும் கண்டோம்.

  ​ ஆதலால் இந்த திட்டத்தில் சேர விரும்பும் நமது சங்க உறுப்பினர்களே மதுரையில் 20-7-2014 அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம் . தங்களது 2014-2015 சந்தா பாக்கி ஏதும் இருந்தால் உடனே செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

if you have any questions regarding above matter please contact PRO mobile # 9940629533

GoBack