Acheivements
 
19-02-2014
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்

பெறுநர்
       மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
       தலைமைச் செயலகம்
       சென்னை

 

            நாங்கள் தமிழ்நாடு இ டிக்கெட் ஏஜென்டுகள் நலச் சங்கம் என்ற பெயரில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். எங்களது சங்க உறுப்பினர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இணையதளம் (ஆன்லைன்) மூலமாக பொதுமக்களுக்கு விமானம், இரயில் மற்றும் பேருந்து பயணசீட்டுகளை முன்பதிவு செய்துதரும் சேவையைச் சிறப்பாக செய்து வருகிறார்கள். இது தவிர இண்டர்நெட் உதவியோடு இணையதளங்கள் மூலமாக செய்யக்கூடிய இதர சில பணிகளையும் செய்து வருகின்றனர். எங்கள் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானோர் படித்த இளைஞர்கள் சுயவேலை வாய்ப்பாக கருதி இத்தொழிலை செய்து வருகின்றார்கள்.

                        தமிழக அரசு நிறுவனங்களின் சில பணிகளும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருவதை நாங்கள் அறிவோம். உதராணமாக ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவது அரசு பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது மற்றும் ஆன்லைன் மூலமாக சொத்துவரி செலுத்துவது போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வசதிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும்  சென்றடையும் விதமாக எங்கள் சங்க உறுப்பினர்கள் இப்பணிகளை முறையாகச் செய்ய விரும்புகின்றனர். எனவே இதுபோன்ற ஆன்லைன் பணிகளைச் செய்ய எங்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கி அப்பணிகளை செய்வதற்கான சேவைக் கட்டணத்தையும் நிர்ணயம் செய்து வழங்கினால் அது இப்பணி செய்வோர்க்கு பேருதவியாக அமையும்.

                        தற்போது சில பணிகளை ஆன்லைன் மூலமாக மேற்கொள்வதால் பணம் மிச்சமாகிறது மற்றும் கால விரயம் தவிர்க்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் அனைத்து பணிகளையும் ஆன்லைன் மூலமாக செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்கள் இப்பணிகளை முறையாகச் செயல்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி எங்களைப் போன்ற சுயதொழில் புரிவோர்க்கு தகுந்த அங்கீகாரம் வழங்கி எங்களது வருவாயைப் பெருக்க உதவ வேண்டும் எனவும் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் எங்கள் சங்கத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

                              

                                          நன்றி

GoBack