தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் நல வாரியத்தில் சங்க உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பாக
பெறுநர்,
உயர்திரு. தொழிலாளர் நல அலுவலர் / இயக்குநர் அவர்கள்
முறைசாரா தொழிலாளர் நல வாரியம்.
சென்னை
பொருள்:- தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் நல வாரியத்தில் எங்களது சங்க உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பாக
ஐயா,
நாங்கள் இணையதளம் மூலம் இரயில் மற்றும் பேருந்து பயணசீட்டுகளை முன்பதிவு செய்து கொடுப்பது, மொபைல் ரீசார்ஜ் செய்வது மற்றும் இதர இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தும் சேவைகள் ஆகியவற்றை சுய தொழிலாகச் செய்துவருகிறோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் எங்களுக்கென தமிழ்நாடு இ டிக்கெட் ஏஜெண்டுகள் நலச்சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்து உறுப்பினர்களுக்கு பலனளிக்கும் வகையில் சேவைகளைச் செய்து வருகிறோம். தற்போது இத்தொழில் நலிவடைந்து வருவதால் எங்களுக்கு இத்தொழில் மூலம் குறைந்த அளவு வருமானத்தையே ஈட்ட முடிகிறது. எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் முறைசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர்த்து, அரசு அளிக்கும் நலத்திட்டங்களின் பயன்கள் எங்களுக்கும் கிடைக்க ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி,