15-08-2020
மாநில தலைமை குழு கூட்டம்
நமது சங்கத்தின் மாநில தலைமை குழு கூட்டம் 15 8 2020 அன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு முகமது இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் திரு கண்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் திரு கிருஷ்ணகுமார் அவர்களால் சங்கத்தின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநில துணைத் தலைவர் திரு பாலாஜி அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தார். மாநில இணைச் செயலாளர் திரு ஜாகிர் உசேன் அவர்கள் உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிர்வாகத்திடம் எடுத்துரைத்தார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1. விண்ணப்பம் செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ied மூலமாக sbi bc பாயிண்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படும்
2. நமது உறுப்பினர்களுக்கு e district சேவை ஐடி காக தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது என்றும்
3. உறுப்பினர்களுக்கு சங்க அடையாள அட்டை சங்க இணையதளம் வாயிலாக வழங்குவது என்றும்
4. பொதுக்குழு கூட்டத்தை ஊரடங்கு காலம் முடிந்த பிறகு நடத்துவது என்றும் 5. அனைத்து போர்டல்களை இணைத்து ஒரே இணையதளத்தில் கொண்டு வருவது என்றும்
6. சங்க உறுப்பினர் என்று சில பேர் காட்டிக் கொண்டு சங்க உறுப்பினர்களை நம் பகமில்லாத ஆன்லைன் வர்த்தகம் செய்யக்கோரி துன்புறுத்தினால் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும்
7. சங்க உறுப்பினர்களை தரக்குறைவாக எவ்வித நிறுவனங்கள் நடத்தினாலும் அவர்களை எதிர்த்து உறுப்பினர்களின் நலன் காக்க போராட்டத்தில் கையிலெடுக்கும் என்றும் ஏகமனதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
திரு கிருஷ்ண குமார் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவேறியது
|