27-12-2014
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு போராட்டம்
அன்புள்ள உறுப்பினர்களே
 
இப்பவும் வருகின்ற ஜனவரி 2015  கடைசி வாரத்தில்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு மத்திய மாநில அரசுகளுக்கு "21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு போராட்டம்" நடத்த நமது சங்கத்தின் சார்பாக திட்டமிடப் பட்டுள்ளது.
இதில் தங்களது கோரிக்கைகளும் தங்களது மாவட்ட கோரிக்கைகளும் வரவேற்கப்படுகிறது. தங்களது கோரிக்கைகளை info@tetawa.org என்ற ஈமெயில் முகவரிக்கு உடனே அனுப்பவும்

 
கோரிக்கைகள்
1.E-governance திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதை பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் எங்களது சங்க உறுப்பினர்களுக்கு எவ்வித நிபந்தனை இல்லாமல் வழங்க வேண்டும்
 
2.தமிழக அரசு இ-டிக்கெட் முகவர்களுக்கு  நல வாரியம் அமைக்க  வேண்டும்
 
3.பேருந்து நிலையத்தில் தோன்றும் திடீர் மற்றும் போலியான முகவர்களை ஒழிக்க வேண்டும்
 
4.தமிழக அரசின் விரைவு பேருந்தில்  (setc) பொது மக்களுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்வதற்கு ஏதுவாக சங்க உறுப்பினர்களுக்கு இலவச லாகின் ஐ டி களை எவ்வித நிபந்தனை  இன்றி வழங்க வேண்டும்
 
5.தமிழக அரசு ஓம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
 
6.தமிழக அரசு பொது மக்களிடமிருந்து மின் கட்டணத்தை வசூல் செய்ய எதுவாக லாகின் ஐ டி களை  எங்களது சங்க உறுப்பினர்களுக்கு எவ்வித நிபந்தனை இல்லாமல் வழங்க வேண்டும்
 
7.தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள சுற்றுல்லா தலம் மற்றும் புனிததலங்களை பட்டியலிட்டு அதை நன்கு பராமரித்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டினர் கவரக்கூடிய வகையில் ஏற்ப்பாடு செய்ய வேண்டும்
 
8.தமிழக அரசும் சுற்றுல்லா துறையும் இணைந்து நமது பாரம்பரிய மிக்க புரதான சின்னங்களை அழிவில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே நேரத்தில் மக்களுக்கு அது பற்றி விழிப்புணர்வை கொண்டுவரவேண்டும்
 
9.இந்தியன் ரயில்வே துறை முகவர்களுக்கு எவ்வித முகாந்தாரம் இல்லாமல் பயண சீட்டு  முன்பதிவை தடை செய்யப்பட்டுள்ள காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை தடையே உடனே நீக்க வேண்டும்
 
10.இந்தியன் ரயில்வே துறை கால அளவு இல்லாமல் சேவை செய்யும் முகவர்களுக்கு சேவை கட்டணத்தை உயர்த்தி கொடுக்கு வேண்டும்
 
11. இந்தியன் ரயில்வே துறை ரயில் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்தும் அவர்களை எலி,கரப்பான் மற்றும் மூட்டை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்
 

12. இந்தியன் விமான துறை ஆணையம் தமிழகத்தின்  தென்மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் மதுரையில் அதிக விமான சேவைகளை தொடங்க ஆவன செய்து பன்னாட்டு விமான நிலையத்திற்குரிய அந்தஸ்த்தை உடனே வழங்கவேண்டும்

 

 

திரு.கணபதி ராமன் ​அவர்களின், கருத்துக்கள் 

 
RAILWAY E TICKET AGENT :
 
 
(1)      டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு இடவசதி, மின்வசதி கணினி மற்றும் இணையதள வசதி, ஊழியர்களின் சம்பளம் போண்டர்வைகளுக்கு கணிசமான தொகையை ரயில்வே நிர்வாகம் செலவு செய்கிறது. ஆனால் இவை அனைத்துக்கும், இலட்சகணக்கில் பணம் முதலீடு செய்து இ டிக்கெட் உரிமம் பெற்ற இ டிக்கெட் ஏஜெண்டுகளுக்கு ஒரு PNRக்கு வெறும் 10 ரூபாய் மட்டும் வழங்குவது எந்த வகையில் சரியானது என்று தெரியவில்லை. இன்றைய விலைவாசி உயர்வில் இது மிக மிக  குறைவான தொகை என்பது அனைவருக்கும் தெரியும். 
 
அங்கீகாரம் பெற்ற இ டிக்கெட் ஏஜெண்டுகள் மறு விற்பனையாளர்கள்  (Reseller or Retailer) என்று அழைக்கப்பட வேண்டும்.
 
வருடத்திற்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாக சில்லறை வணிகம் செய்வோர் (Retailer) குறைந்தபட்சம் 8 சதவீதம் நிகர இலாபம் பெறுவர் என்று  நமது நாட்டின் வருமானவரித்துறை ஆய்வு செய்து அதன் அடிப்படையில்தான் வருமானவரியானது வருமான வரிச்சட்டம் 44ABன் படி சில்லறை வணிகர்களுக்கு விதிக்கபடுகிறது.  
 
இதன்படி  ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும்  அங்கீகாரம் பெற்ற இ டிக்கெட் ஏஜெண்டுகளுக்கு பயணதொகையில் குறைந்தபட்சம்  8 சதவீதம் இலாபமாக ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும்.
 
இதனால் நேர்மையான வர்த்தகம் நடைபெறும். 
 
 
(2)  அனைத்து நுகர்வோர் பொருள்களும் MRP (MAXIMUM RETAIL PRICE) என்ற வரையறைக்குள்   கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அனைத்து  மக்களின் விருப்பமாகும்     அதன்படி ரயில்வே பயணசீட்டும் ஒரு நுகர்வோர் பொருளாகும்.
 
         ஆகவே ரயில்வே பயண சீட்டு,  அனைத்து கட்டணங்களையும் (ஏஜெண்டுகளின் இலாபம் உட்பட ) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் .
 
         எந்த இடத்தில வாங்கினாலும் டிக்கெட் விலை ஒன்றுதான் என்ற  நிலை ஏற்பட்டால்  ரயில்நிலையங்களில் டிக்கெட் கௌண்டர்களில் கூட்டம் குறையும்.
 இ டிக்கெட் ஏஜெண்டுகளிடம் மக்களுக்கு முழுமையான நம்பிக்கை  ஏற்படும் 
 
 
(3)  அங்கீகாரம்  பெற்ற சிறிய ஏஜெண்டுகளை ஏமாற்றும் PRINCIPAL ஏஜெண்டுகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க  வேண்டும்.
 
       இந்தியா முழுவதும் சுமார் 1,50,000 ஏஜெண்டுகளிடம் PRINCIPAL ஏஜெண்டுகள் வசூலித்த (1,50,000 X Rs.10,000) 150 கோடி ரூபாய் என்னவானது  என்பது குறித்து விசாரணை நடைபெறவேண்டும்.
 
(4)  கடின  உழைப்பும், கணினி செயல்பாட்டு திறனும் ஒருங்கே அமையபெற்ற TETAWA சங்கத்தை சார்ந்த   இ டிக்கெட் ஏஜெண்டுகளின் அனுபவ திறமையை ரயில்வே நிர்வாகம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
      IRCTC, PRINCIPAL  ஏஜெண்டுகளை  தவிர்த்து, நேரடியாக இ டிக்கெட் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும்.   இதன்மூலம் சாதாரண இ டிக்கெட் ஏஜெண்டுகள் ஏமாற்றபடுவது தடுக்கப்படும்.
 
 
(5)  ரயில்வே  ஆலோசனை குழுவில் TETAWA சங்க உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும்.
 
 
REQUIRED TRAINS :
 
 
(1)  தென் மாவட்ட மக்களின் தேவைக்காக நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு தினமும் இருக்கை வசதிகள் மட்டும் கொண்ட பகல்நேர விரைவு ரயில் விடப்பட வேண்டும்.  நாகர்கோயிலில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி மதுரை திருச்சி விழுப்புரம் வழியாக இரவு 8 மணிக்கு சென்னை சென்றடையும்படி .இருக்க வேண்டும். அதே போன்று சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணி அளவில் நாகர்கோயில் சென்றடைய வேண்டும்.  இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவர்   
 
(2)  சென்னையில் இருந்து தென்  மாவட்டங்களுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று (இரவு 10 மணிக்கு மேல்) படுக்கை  மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சிறப்பு ரயில் சென்னை முதல் நாகர்கோயில் வரை  இயக்கப்பட வேண்டும்.
 
     அதேபோன்று ஒவ்வொரு வாரமும்  ஞாயற்றுகிழமை அன்று மாலை  (மறுநாள் காலை 6 மணிக்கு சென்னையை சென்றடையும்படி) படுக்கை  மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சிறப்பு ரயில் நாகர்கோயில் முதல் சென்னை  வரை  இயக்கப்பட வேண்டும்.
 
 
(3) மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் தேவை.  மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருப்பதி சென்றடைய வேண்டும்.  மறுமார்க்கத்தில் அதே போன்று ரயில் வசதி வேண்டும்.
 
 
FLIGHT 
 
(1) மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட வேண்டும்.
 
(2) விமான பயணத்திற்கு முன்பதிவு செய்வது  பின்னர் விமானத்தை ரத்து செய்வது என்று விமான கம்பெனிகள் இஷ்டம்போல் நடந்து கொள்கின்றன.  பயணம் ரத்து செய்யப்பட்டால் பயணதொகையை திருப்பி வழங்குவதில் தேவையற்ற தாமதத்தை ஏறபடுத்தி வருகின்றன 
 
        இதனை தவிர்க்க விமான கம்பனிகள் முறைபடுத்த வேண்டும்     வங்கிகளுக்கு RESERVE BANK,  பங்கு வர்த்தகத்திற்கு SEBI  இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு IRDA என்று இருப்பதை போல் விமான சேவைகளுக்கும் தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
 
 
 

 

 

GoBack