23-02-2014
நமது சங்கத்தின் 2வது மாநில செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நமது சங்கத்தின் 2வது மாநில செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நமது சங்கத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் 23/02/2014 காலை 10மணிக்கு நடைபெற்றது.கூட்டத்தை மாநில தலைவர் திரு.மோகனசுந்தரம் அவர்கள் தலைமையேற்க மாநில பொதுசெயலாளர் திரு.கண்ணன் முன்னிலை வகிக்க இறை வணக்கத்துடன் தொடங்கியது.கீழ்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மக்கள் தொடர்பு அலுவலர் சங்கத்தின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்து  அனைவரது பாராட்டும் பெறப்பட்டது .பொருளாளர் திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் சங்கத்தின் வரவு செலவுகளை வசித்து அனைவரது ஒப்புதலும் ஏற்க்கபட்டது.30/9/2013ம் தேதி படி சங்கத்தின் முன் இருப்பு ரொக்கம் 1,565/- ரூபாய் ஆகவும்,வங்கி இருப்பு ரூபாய்  3,080/-  அகவும் இருந்தது,நாளது தேதிமுதல் 22-02-2014 வரை சங்கத்தின் வருமானம் ரூபாய் 73,345/-          எனவும்,செலவு ரூபாய் 38,852/- எனவும், ஆக மொத்தம் கையிருப்பு ரொக்கம் 4015/-எனவும் ,வங்கி இருப்பு 30,478/- ரூபாய் எனவும் கணக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திரு.முத்து,இராமநாதபுரம்,மாவட்ட செயலாளர்

(1) விமான சேவைகள் வளர்ச்சி குறித்தும் அது சம்பந்தமாக கண்காட்சி நடத்த வேண்டும் 

(2) இந்திய சுற்றுலா துறையில் நமது சங்கத்தை இணைக்க வேண்டும் 
(3) இந்தியன் ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்ட படி ரயில் நிலைய முன்பதிவு டிக்கெட் கவுண்டரில் ஒப்பந்த அடிபடையில் பணிபுரிய நமது சங்க உறுப்பினருக்கு கிடைக்க ஏற்பாடு  செய்யவேண்டும் 
(4) ரயில்வே,ஓம்னி பஸ் ,விமானம் போன்ற துறையில் நமது சங்க உறுப்பினர்கள் கமிட்டி மெம்பர்களாக நியமிக்க படவேண்டும் 
(5) பயிற்சி வகுப்பை விரைவில் இராமநாதபுரம் மாவட்ட உறுப்பினர்கள் பயன் பெறும்வகையில் உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திரு.ஜெகநாத் பழனி, அவர்கள் தேனி மாவட்ட செயலாளர் 
(1) OSS  கம்பெனியால் பாதிக்கப்பட்ட நமது சங்க உறுப்பினர்களுக்கு நீதி கிடைக்க உடனே ஏற்பாடு செய்யப்படவேண்டும் 
(2) மூனாறு பகுதியில் தங்குவதற்கு ரூம் தேவைபட்டால் என்னை தொடர்புகொள்ளவும் 
திரு.புஷ்பராஜ்,அவர்கள்,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் 
(1) ரயில்வே டிக்கெட்டுக்கு ஏஜெண்டு கட்டணம் ரூபாய் 10 என்பதை மாற்றி அமைக்க பாடுபடவேண்டும் 
(2) விரைவில் சங்க கூட்டத்தை கோவில்பட்டியில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் 
துணைத் தலைவர் திரு.கண்ணன்,அவர்கள் (கோவில்பட்டி)
(1) சுற்றுலா திட்டங்களை அனைவரும் பகிர்ந்துகொள்ளவேண்டும் 
(2) சங்கத்திற்கு புதிய லோகோ அமைக்கவேண்டும் 
(3) இந்திய சுற்றுலா துறையில் நமது சங்கத்தை இணைக்க வேண்டும்
(4) விமான நிலையத்தில் நமது சங்கத்திற்கு என அலுவலகம் அமைக்க வேண்டும் 
திரு.முகமது இபுராஹிம் மாநில இணைச் செயலாளர்
(1) மாநில பொது செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கது 
(2) அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் 
திரு.ரமேஷ்,அவர்கள்,மாநில செயற்குழு உறுப்பினர் (மதுரை)
எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை மிகுந்த வளர்ச்சி அடைந்து வருவதால் சுற்றுல்லா கண்காட்சியே மதுரையில் நடத்தவேண்டும் 
திரு மணி துணைத் தலைவர் 
(1) சுற்றுலா கண்காட்சி நடத்த ஒரு குழுவினையும், சுற்றுலா திட்டங்களை நடத்த ஒரு குழுவினையும் நியமிக்க வேண்டும்.
(2) அந்தமானுக்கு செல்லும் கப்பல் போக்குவரத்து பற்றிய விவரங்களை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் 
திரு பாலாஜி செயற்குழு உறுப்பினர் 
(1) ஸ்மார்ட் ஷாப் ரயில் டிக்கெட்டில் PC CHARGES என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வாங்கப்படுகிறது. இது  எதற்காக வசூலிக்கபடுகிறது என்பது குறித்து TSS கம்பெனியிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
(2) உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைத்து அவர்கள் மூலமாக உறுப்பினர்களிடம் வழங்க வேண்டும்.
திரு ஆசைக்கனி,ராமநாதபுர மாவட்ட ஆலோசகர்
(1) சங்கத்தின் வளர்ச்சி பாராட்டக்கூடிய அளவில் உள்ளது 
(2) உறப்பினர்களை அதிகம் சேர்க்க வேண்டும்.
திரு சுப்புராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்,விருதுநகர்  மாவட்டம்
(1) விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நமது சங்க உறுப்பினர் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும்.
(2) விருதுநகர் மாவட்ட செயலாளர் அந்த மாவட்ட உறுப்பினர்களுடன் சரிவர ஒத்துழைப்பது இல்லை.
திரு.சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர்,இராமநாதபுரம் 
(1) எதிர்காலத்தில் வளர்ச்சியடையும் துறைகளில் ஒன்றான ஏற்றுமதி வாய்ப்புகளை கொண்ட CARGO துறையில் நாம் பங்கு பெற வேண்டும் 
(2) வெளி நாடுகளில் வேலை ஆட்களை நியமிக்கும் நிறுவனங்களின் மூலம் நாம் நமது பகுதிகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் 
திரு ஜோதிகுமார்,  செயற்குழு உறுப்பினர்,மதுரை 
மதுரையில் உள்ள சுற்றுலா தளங்களை காணும் வகையில் ஒரு சுற்றுலா திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் 
திரு மீனாட்சி சுந்தரம்,  செயற்குழு உறுப்பினர் 
நமது சங்க உறுப்பினர்கள், distriputer மூலம் டாப் அப் செய்தபின் அதற்குரிய தொகையை உடனடியாக செலுத்தினால் distributor களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 
திரு கணபதிராமன்,  நிதி வளர்ச்சி அலுவலர் 
(1) மாவட்ட செயலாளர்களின் பணிசுமையை குறைக்க அவர்களுக்கு உதவியாக மாவட்ட இணை செயலாளர்களை  நியமிக்க வேண்டும்.
(2) IRCTC இல் முதன்மை ஏஜெண்டுகள் அக உரிமம் பெற டெபாசிட் தொகை 5 இலட்சமாக குறைக்கபட்டுள்ளது   இதை பயன்படுத்தி நமது சங்கத்தின் பெயரில் முதன்மை ஏஜென்ட் உரிமத்தை நாம் பெற வேண்டும்.
(3) ரயில்வே ஆலோசனை கமிட்டியில் நமது சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் இடம் பெற நாம் முயற்சிக்க வேண்டும் 
(4) பஸ் மற்றும் விமான பயண சீட்டுகளை முன்பதிவு செய்ய நமது சங்கத்தின் சார்பில் ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும்  இதன்மூலம் நமது சங்கத்திற்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் 
திரு கிருஷ்ணகுமார், பொருளாளர் 
(1) சங்க உறுப்பினர்களுக்கு  வரிகள்  சம்பந்தமான ஆலோசனைகள் வழங்க ஒரு ஆடிட்டரை நியமிக்க வேண்டும்,
(2) மாவட்ட செயலாளர்கள் உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் 
திரு  ஜாகிர் ஹுசைன் மக்கள் தொடர்பு அலுவலர் 
(1) 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நமது சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு நமது சங்கத்தின் சார்பில் பரிசுகள் வழங்க வேண்டும்.
(2) சுற்றுலா துறை அமைச்சகத்தில் நமது சங்கத்தை பதிவு செய்ய முயற்சிகள் எடுக்க வேண்டும்.
(3) சுற்றுலா பற்றிய விவரங்கள் தொக்குக்கபட்டு அவை சங்க உறுப்பினர்களுக்கு  பயன் பெரும் வகையில் நமது சங்க இணையதளத்தில் இடம்பெற செய்ய வேண்டும் 
(4) one stop shop பிரச்சினையில் நல்ல முடிவு எட்டப்படவேண்டும்.
(5) சங்கத்தின் வாயிலாக பங்குகள் வெளியிட்டு அதன்மூலம் நமகென்று ஒரு போர்டலை உருவாக்கி அதில் கிடைக்கும் லாபம் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
திரு கண்ணன்,மாநில  பொது செயலாளர் 
(1) நமது சங்கம்  SRMU சங்கத்தின் இணைப்பு சங்கமாக செயல்பட முயற்சிகள் எடுக்கப்பட்டு   வருகிறது.
(2) தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்துதர நமது சங்க உறுப்பினர்களை  அங்கீகாரம் பெற்ற ஏஜெண்டுகளாக நியமிக்கும்படி தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
(3) அதே போன்று மின்கட்டணம் செலுத்தவும் இணையத்தின் மூலம் வீட்டு வரி போன்ற வரிகள் செலுத்தவும் மக்களுக்கு உதவும் வகையில் நமது சங்க உறுப்பினர்களை தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஏஜெண்டுகளாக நியமிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்களில் பேச்சு வாரத்தைகள் நடத்தப்பட்டு வருகிறது 
(4) மாநில செயற்குழு கூட்டங்கள் இனி மதுரையில் மட்டுமின்றி வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படும். 
(5) விருதுநகர் தூத்துக்குடி மாவட்ட உறுப்பினர்களின் கூட்டம் ஜூன் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் 
(6) நமது சங்கம் IRCTC இல் முதன்மை ஏஜென்ட் ஆக உரிமம் பெற முயற்சிகள் எடுக்கப்படும். 
(7) OSS நிறுவனத்திற்கு எதிரான போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் 
(8) TDS  மற்றும் வருமான வரி விசயங்களில் நமது சங்க உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் நமது சங்கத்தின் சார்பில் வரி ஆலோசகர் ஒருவர் நியமிக்கபடுவார் 
(9)  மாவட்ட செயலாளர்களின் பணிகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவியாக மாவட்ட இணை செயலாளர்கள் நியமிக்கபடுவர்..
 
தலைவர் திரு மோகனசுந்தரம் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.
 

மதியம் 2 மணி அளவில் கூட்டம் முடிவுற்றது.

GoBack