Acheivements
 
25-04-2020
தீர்மானம் 3/2020 -உச்சநீதிமன்றத்தில் பிரவாசி லீகல் செல் மூலமாக பொதுநல வழக்கு தொடர்வது
25.04.2020 அன்று மாநில தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஊரடங்கு காலங்களில் விமான டிக்கெட் முன்பதிவு செய்ததில் விமான நிறுவனங்கள் விமான சேவையை ரத்து செய்தபோதிலும் அதற்குரிய முன்பதிவு கட்டணத்தை திரும்ப செலுத்தாமல் யாருக்கும் உபயோகப்படுத்த முடியாத கிரெடிட் செல் ஆப்ஷன் என்ற முறையே அறிமுகப்படுத்தியது இதனால் வாடிக்கையாளர்களும், இ-டிக்கெட் முகவர்களும் மிகவும் பாதிப்படைவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரவாசி லீகல் செல் மூலமாக பொதுநல வழக்கு தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த வழக்கிற்கு வக்காலத்து மற்றும் வழக்கை நடத்த நமது சங்கத்தின் இணைச் செயலாளர் திரு ஜாகிர் உசேன் அவர்களே நியமிப்பது என்றும் அவருக்கு துணையாக மாநில துணைத் தலைவர் திரு பாலாஜி அவர்களையும் மாநில பொருளாளர் திரு கிருஷ்ணகுமார் அவர்களையும் நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
 
தீர்வு... பிரவாசி லீகல் செல் மூலமாக 27 04 2020 அன்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.. வழக்கு எண் 10966/2020
 

GoBack